Last Updated : 20 Apr, 2020 11:31 AM

 

Published : 20 Apr 2020 11:31 AM
Last Updated : 20 Apr 2020 11:31 AM

கரோனா வைரஸ்: அமெரிக்காவில் அர்ப்பணிப்பு பணியில் உயிர்த்தியாகம் செய்த பல இந்திய மருத்துவர்கள்

அமெரிக்காவில் கரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது, இதில் மருத்துவமனைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இந்திய மருத்துவர்களுக்கும் கரோனா தொற்று பரவி அதில் சிலர் உயிர்த்தியாகம் செய்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய அமெரிக்க மருத்துவரான டாக்டர் மாத்வி அயா என்பவர் நியூயார்க்கில் மருத்துவப் பணியில் இருந்த போது கரோனா தொற்று பீடித்தது. இதற்குப் பிறகு அவர் தன் கணவர் மற்றும் மகளுக்கு மருத்துவமனையிலிருந்து குறுஞ்செய்தி மட்டுமே அனுப்ப முடிந்தது. கடைசியில் கரோனாவுக்கு இவரே பலியானது குடும்பத்தினர் மத்தியில் பெரும் வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

61 வயதான மாத்வி 1994-ல் தன் கணவருடன் அமெரிக்காவுக்குச் சென்றார். இவர் உட்பட நியுயார்க், நியூஜெர்சியில் பல இந்திய-அமெரிக்க மருத்துவர்கள் கரோனா சிகிச்சைப் போராட்டத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.

இவர் குறித்து அமெரிக்க செய்தித்தாள் ஒன்று, “மாத்வியின் குறுஞ்செய்திகள் அவரது குடும்பத்தினர் அளிக்கும் செய்திகளின்படி அவரின் இறுதி நாட்கள் கரோனா பாதிப்பு சிகிச்சையளிப்பதில் சென்றது அதனால் அவர் உயிரும் பறிபோய்விட்டது” என்றும் தெரிவித்தார்.

இந்திய-அமெரிக்க மருத்துவர்கள் பலர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக இந்திய -அமெரிக்க சமூகத்தினர் தெரிவித்தனர்.

பல இந்திய மருத்துவர்கள் சிகிச்சையில் முன்னிலை வகிக்கின்ற்னார், இதில் சில இந்திய மருத்துவர்கள் கரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலானோர் நியூயார்க், நியூஜெர்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்குள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.

டாக்டர் ரஜத் குப்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த மாதத் தொடக்கத்தில் நியுஜெர்சி மருத்துவமனையில் கரோனா நோயாளி ஒருவருக்கு எமர்ஜென்சி அறையில் சிகிச்சை அளித்தார். சில மாதங்களுக்குப் பிறகு நோயாளி ஒருவர் இவர் மீது எதையோ விட்டெறிந்தார். அது இவர் முகத்தை முழு வீச்சுடன் தாக்கியது. இதன்பிறகு டாக்டர் குப்தாவுக்கு காய்ச்சல் வர கரோனா பாசிட்டிவ் என்று அவருக்கு உறுதியானது, கடுமையான முயற்சியிலும் இவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பின் செயலர் ரவி கோலி என்பவர் கூறும்போது, “எத்தனை மருத்துவர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார்கள் என்ற துல்லியமான எண்ணிக்கை தெரியவரவில்லை” என்றார்.

இந்திய-அமெரிக்க மருத்துவர்கள் அமைப்பிலேயே இந்த அமைப்புதான் பெரியது, சுமார் 80,000 இந்திய-அமெரிக்க மருத்துவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில் இந்திய அமெரிக்க மருத்துவர்கள்தான் அதிகம் சிகிச்சையில் முன்னணியில் நிற்கின்றனர், இவர்களை சரியாக நடத்தாத நோயாளிகளையும் இவர்கள்தான் நன்றாக கவனிக்கின்றனர் என்கிறார் ரவி கோலி.

இந்த வார தொடக்கத்தில் இந்திய அமெரிக்க கிட்னி நிபுணர் பிரியா கன்னா, 43, நியு ஜெர்சி மருத்துவமனையில் மரணமடைந்தார். இவர் தந்தை சத்யேந்திர கன்னா ஒரு பொது அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார். பிரிய கன்னாவுக்கு கரோனா வைரஸ் பாதித்தது. சிகிச்சைப் பலனின்றி இவர் இறந்தார்.

“இந்திய அமெரிக்க மருத்துவர்கள்தான் உண்மையில் ஹீரோக்கள், சிகிச்சை நடைமுறையில் இவர்களுக்கு கரோனா தொற்றுகிறது, சிலர் இறந்தே போய் விட்டனர், சிலர் ஐசியுவில் உள்ளனர், சிலர் வீட்டில் தேறி வருகின்றனர்” என்ரு ஏஏபிஐ துணைத் தலைவர் டாக்டர் அனுபமா கோதிமுகுலா தெரிவித்தார்,

முன்னாள் ஏஏபிஐ தலைவர் டாக்டர் அஜய் லோதாவுக்கும் கரோனா பாசிட்டிவ், இவரும் ஐசியுவில் உள்ளார், இவர் தேறி வர இந்திய மருத்துவ சமூகம் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது.

கேஸ்ட்ரோ எண்டராலஜிஸ்ட் டாக்டர் அஞ்சனா சமாதர், ஓஹியோவைச் சேர்ந்த்வர், இவர் டாக்டர் கவுதம் சமாதர் என்பவரின் மனைவி, இவரும் கரோனா பீடிப்பினால் உயிருக்குப் போராடி வருகிரார். இன்னொரு இந்திய அமெரிக்க மருத்துவர் டாக்டர் சுனில் மெஹ்ரா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“இவர்கள் கரோனா சவாலை தைரியமாக முன்னிலையில் நின்று சிகிச்சை அளித்து உதவின்ர், தன் உயிரையும் பணயம் வைத்தனர். இதுவே இவர்களது கடைமை உணர்ச்சி, கருணை பற்றி பக்கம் பக்கமாக பேசும்” என்கிறார் ரவி கோலி.

அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட ஆசிய அமெரிக்கர்கள் 4.45 என்று அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மைய தரவு தெரிவிக்கிறது.

இந்திய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்திய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x