Published : 19 Apr 2020 08:25 AM
Last Updated : 19 Apr 2020 08:25 AM
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்பிடம் விலங்குகள் சந்தையை சீனா மூடுமாறு சீன அதிபர் ஜின்பிங்கிடம் வலியுறுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக ட்ரம்புக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்சீ ஹேஸ்டிங்ஸ் மற்றும் வெர்ன் புகானன் ஆகியோர் உயிருடன் விலங்குகளை விற்கும் விலங்குச்சந்தையினால்தான் வைரஸ் பரவுகிறது, உடனடியாக அதை மூடினால்தான் சரிவரும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்கால வைரஸ் பரவலைத் தடுப்பதற்கும் இதுதான் ஒரே வழி என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர், மேலும், விலங்குகள் சந்தையிலிருந்து அது மனிதருக்கு பரவி மனிதரிலிருந்து மனிதருக்குப் பரவும் ஒரிய வைரஸாக மாறுவதைத் தடுக்க விலங்குகள் சந்தைகளை மூட வேண்டும்.
சீனாவில் சட்டத்திட்டங்கள் இல்லாமல் மனிதார்த்த அக்கறைகள் இல்லாமல் விலங்குகள் கொல்லப்பட்டு விற்கப்படுகின்றன. இதுதான் விலங்கு வைரஸ் பரவ காரணமாகிறது.
இந்தச் சந்தைகளில் சுகாதார நிலைமைகள் படுமோசமாக உள்ளன, ஏனெனில் எண்ணற்ற விலங்குகள் கொல்லப்படுகின்றன, இதன் மூலம் வைரஸ் பரவலில் எண்ணற்ற மனித உயிர்கள் பலியாகின்றன.
எனவே அடுத்த மரண வைரஸ் வெடிப்பதற்கு முன்பாக விலங்குகள் சந்தையை மூடியாக வேண்டும்.
இந்த கரோனா எனும் மரண தொற்று எங்கிருந்து பரவியது என்பதை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில் எங்கிருந்து பரவுகிறது என்று தெரியாமல் இருந்தால் நாம் மீண்டும் இன்னொரு வைரஸ் பரவலை ஊக்குவிக்கிறோம் என்றே அர்த்த.
இதே போன்ற இன்னொரு வைரஸ் மீண்டும் வரும் என்பதோடு பெரிய அளவில் பரவி நாடுகளின் உயிர்களையும், பொருளாதரத்தையும் ஒரு சேர அழித்து விடும் ஆகவே அதிபர் ட்ரம்ப், சீனாவிடம் கூறி விலங்குகள் சந்தையை மூட வலியுறுத்த வேண்டும், என்று அந்தக் கடிதத்தில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT