Published : 18 Apr 2020 10:23 AM
Last Updated : 18 Apr 2020 10:23 AM
கரோனா வைரஸ் தொற்றை அடக்குவதில் சீனா தன்னை நிரூபித்தது போல் தென் கொரியா, ஜெர்மனி, ஐஸ்லாந்து, தய்வான் ஆகிய நாடுகள் செயல்பட்ட ஆக்ரோஷமான விதம் தற்போது உலகிற்கே வழிகாட்டியாக உள்ளன.
அமெரிக்காவும், பிரிட்டனும் எப்போது முதல் கரோனா வைரஸ் தொற்று என்று கூறினார்களோ அப்போதே தென் கொரியாவிலும் பரவத் தொடங்கியது. ஆனால் மரணவிகிதம்தான் வித்தியாசம். லட்சத்தில் ஒருவர் தென் கொரியாவில் மரணம் என்றால், பிரிட்டனில் லட்சத்தில் 18-ம், அமெரிக்காவில் லட்சத்தில் 8ம் என்று அப்போது இருந்தது.
இதில் தென் கொரியாவின் தாரக மந்திரமென்னவெனில், “முன் கூட்டிய நோய்க்கணிப்பு, முன் கூட்டிய தனிமை, முன்கூட்டிய சிகிச்சை” என்பதுதான்.
“முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டவுடனேயே நாடு முழுதும் 500 ஸ்கிரீனிங் கிளினிக்குகள் உருவாக்கப்பட்டன. சந்தேகக் கேஸ்களைத் தனிமைப்படுத்தி டெஸ்ட்களை மேற்கொண்டோம். குறுகிய காலத்தில் குறைந்த பணியாளர்களுடன் அதிகபட்ச டெஸ்ட்களை மேற்கொண்டோம்” என்று கூறுகிறார் டாக்டர் இயோம் ஜூங் சிக், இவர் கரோனா ஆலோசனை மருத்துவக் குழுவில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் அவுட்-லெட்கள் போல் ஆங்காங்கே நாடு முழுதும் பரிசோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. டெஸ்ட்கள் பெரும்பாலும் இலவசம். பரிசோதனையையும் ஊழியர்கள் பாதுகாப்பான தொலையில் இருந்து மேற்கொண்டனர். இதனைப் பார்த்துதான் அமெரிக்கா இதே மாடலை பல மாகாணங்களில் கடைப்பிடித்தது.
மார்ச் 16-ல் உலகச் சுகாதார அமைப்பு.. ‘டெஸ்ட் டெஸ்ட் டெஸ்ட்’ என்று வலியுறுத்தியது ஆனால் தென் கொரியா முதலிலிருந்தே இதைக் கடைப்பிடித்தது. இது வரை 5 லட்சம் பேருக்கு கரோனா டெஸ்ட் நடத்தியுள்ளது தென் கொரியா.
பல நாடுகள் டெஸ்ட் என்பதில் திணறி வருகின்றன. மேலும் வூஹானிலிருந்து வரும் அனைவரையும் தனிமைப்படுத்தி, டெஸ்ட் செய்து சிகிச்சை செய்வதிலும் வேகம் காட்டியது தென் கொரியா. ஜனவரி 3 முதலே இதனை செய்யத் தொடங்கியது தென் கொரியா.
எனவே தென் கொரியாவிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 12 பாடங்கள்:
1. எப்போதும் முன் கூட்டியே தயாரியிருப்பது
2. விரைவுகதியில் செயலாற்றுவது
3. பரிசோதனை, தடம் காணுதல், தனிமைப்படுத்தல்
4. தரவுகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தல்
5. ஆக்ரோஷமாகச் செயல்படுவது
6. தனியார் மருத்துவமனையை ஈடுபடுத்துதல்
7. தடுப்பு உத்தியுடன் செயல்படுதல்
8. தனியுரிமையை மதித்தல்
9. ஆங்காங்கே பரிசோதனை மையங்களை ஏற்படுத்துதல்
10. தவறுகளிலிருந்து திருத்திக் கொள்ளுதல்
11. லாக்-டவுன், ஊரடங்குக்கு தளர்வுக்குப் பிறகும் கூடுதல் சோதனை
12.மருத்துவமனைகளில் சோதனைத் திறன்களை அதிகரிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment