Published : 17 Apr 2020 05:31 PM
Last Updated : 17 Apr 2020 05:31 PM

கரோனா பீதி; அடைக்கலம் தேடி வந்த 200 ரோஹிங்யா முஸ்லிம்கள்: திருப்பியனுப்பிய மலேசிய அரசு

கோப்புப் படம்

லங்காவி 

மலேசியாவில் அடைக்கலம் தேடி வந்த 200 ரோஹிங்கியா முஸ்லிம்களை கரோனா வைரஸ் பயம் காரணமாக அந்நாட்டு கடலோரா காவல்படையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.

மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில் மியான்மர் அரசு கடந்த 2017-ம் ஆண்டு ராணுவ நடவடிக்கையில் இறங்கியது. மியான்மர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கடந்த தாக்குதல்கள் நடந்தன.

இதில் போராட்டக்காரர்கள் உட்பட பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு மட்டுமல்லாமல் அவர்கள் பல நாடுகளுக்கும் தஞ்சமடைய தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

இந்தநிலையில் மலேசியாவில் அடைக்கலம் தேடி வந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிலர் படகுகளில் வந்தனர். ளை கரோனா வைரஸ் பயம் காரணமாக அந்நாட்டு கடலோரா காவல்படையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.
மலேசியாவுக்கு வடமேற்கு பகுதியில் உள்ள லங்காவி தீவில் தரையிறங்கும் நோக்கில் 200 ரோஹிங்யா முஸ்லிம்கள் படகில் வந்தனர்.

ஆனால் தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் பெரிய அளவில் இருப்பதால் அவர்களை கடல் பகுதியிலேயே மலேசிய கடல்படை தடுத்து நிறுத்தியது. இதுபோன்று ரோஹிங்யா முஸ்லிம்கள் வந்த படகில் மரணம் நிகழ்ந்ததாக ஒரு வாரத்திற்கு முன்பு தகவல் வெளியானது.

இதையடுத்து ரோஹிங்யா முஸ்லிம்கள் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் திருப்பியனுப்பட்டனர். அதேசமயம் அவர்களுக்கு மலேசிய காவல்படையினர் பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x