Published : 17 Apr 2020 10:10 AM
Last Updated : 17 Apr 2020 10:10 AM
சீனாவில் கரோனா உருவாகிய நகரமான வூஹானில் கொரோனா வைரஸ-க்குப் பலியானோர் எண்ணிக்கையை 50% அதிகரித்தது சீனா. அதாவது மொத்த பலி எண்ணிக்கையில் 1,290 மரணங்களை கூடுதலாகச் சேர்த்துள்ளது சீனா.
இதனையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 3,869 ஆக உள்ளது. பல கேஸ்கள் தவறாக ரிப்போர்ட் செய்யப்பட்டதாக சீனா இப்போது முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது.
அதாவது சிலபல மரணங்களை எண்ணிக்கையிலிருந்து தவறவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனா கரோனா வைரஸ் பரவல் மற்றும் மனிதனிலிருந்து மனிதனுக்கு தொற்றும் கரோனாவின் தன்மையை மறைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததோடு சீனாவில் கரோனா மரணங்கள் நிச்சயம் கம்யூனிஸ்ட் அரசாங்கம் காட்டும் கணக்கை விட பன்மடங்கு அதிகமே என்று உலக ஊடகங்கள் அனைத்தும் கூறி வந்தன.
இந்நிலையில் முதற்கட்டமாக சீன அரசின் சமூகவலைத்தளத்தில் வூஹான் கரோனா பலி எண்ணிக்கையை கூடுதலாக 50% அதிகரித்து மேலும் 1,290 மரணங்களைக் கூட்டியுள்ளது.
சீனாவில் 82,389 பேருக்கு இன்னமும் கரோனா தொற்று உள்ளது. 77,944 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா மையமான வூஹானிலிருந்து கடைசி மருத்துவக் குழுவும் புறப்பட்டுச் சென்றுள்ளதையடுத்து கரோனாவிலிருந்து முழுதுமாக மீண்டு வருகிறோம் என்று சீனா தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT