Published : 17 Apr 2020 07:38 AM
Last Updated : 17 Apr 2020 07:38 AM
கரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி மோசமான பாதிப்பை அடைந்த இத்தாலி அதிலிருந்து விடுபடமுயற்சித்தாலும், உயிரிழப்பு குறையவில்லை. அங்கு கரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்தது.
கோவிட்-19 வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவாகியிருந்தாலும் அதிகமான பாதிப்பை ஐரோப்பிய நாடுகளில்தான் ஏற்படுத்தி வருகிறது. அதில் பிரதானமாக பாதிக்கப்பட்டிருப்பது இத்தாலிதான். இத்தாலியில் நேற்று புதிதாக 3,786 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.68 லட்சமாக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணி்க்கை 22 ஆயிரத்து 170 பேராக அதிகரித்துள்ளது, அங்கு நேற்று 525 பேர் உயிரிழந்ததையடுத்து, புதிய எண்ணி்ககையை அடைந்துள்ளது. குணமடைந்தவர்கள் மெல்ல அதிகரித்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலி சிவில் பாதுகாப்பு துறையின் தலைவர் ஏஞ்சலோ போரேலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இத்தாலியில் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்ைக நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. 1,189 பேர் மருத்துவமனையில் நேற்று புதிதாக அனுமதிக்கப்பட்டனர், இதனால் நாடுமுழுவதும் அரசின் கண்காணிப்பில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 607 பேர் உள்ளனர்.
அதேபோல 26 ஆயிரத்து 893 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், இது புதன்கிழமையோடு ஒப்பிடுகையில் 750 பேர் குறைவாகும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர் எண்ணிக்கை 2,936 ஆக இருக்கிறது,
இது புதன்கிழமையோடு ஒப்பிடுைகயில் 143 பேர் குறைவாகும். கடந்த மார்ச் 22-ம் தேதி்க்குப்பின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர் எண்ணி்க்கை இப்போதுதான் குறைந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 72 சதவீதம் பேர் வீடுகளில் சுயதனிமையில் இருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
புதன்கிழமை கூடுதலாக 2 ஆயிரத்துக்கும் அதிகமாக குணமடைந்ததால் குணமானோர் எண்ணிக்கை 40ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதிக்குப்பின் உயிரிழப்பு மிகவும் குறைந்து 521 ஆக நேற்று பதிவானது. இருப்பினும் மொத்த உயிரிழப்பு 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது.கரோனா வைரஸுக்கு எதிரானப்போரில் இதுவரை 127 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளார்கள் “ எனத் தெரிவித்தார்
தேசிய சுகாதார அமைப்பின் தலைவர் சில்வியோ புரூசபேரோ கூறுகையில் “ கடந்த பல நாட்களாக இத்தாலியில் கரோனா நோயாளிகள் குறைந்து வருகிறார்கள், குணமடைந்தோர் அதிகரித்து வருகிறார்கள். இது நம்பிக்கையை அளித்து வருகிறது. கரோனாவின் பாதிப்பிலிருந்து மெல்ல மீள்கிறோம்” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT