Published : 17 Apr 2020 07:33 AM
Last Updated : 17 Apr 2020 07:33 AM
உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா 5.9 மில்லியன் டாலர்கள், அதாவது ரூ. 45 கோடியே 14 லட்சத்து 9 ஆயிரம் சுகாதார நிதியுதவி வழங்கியுள்ளது.
வைரஸ் பரவல் தடுப்பு, பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு சிகிச்சை, அத்தியாவசிய பொதுச் சுகாதார செய்திகளைப் பரப்புதல், கரோனா நோயாளிகளைத் தடம் காணுதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றுக்காக இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது
“மொத்தமாக 2.8 பில்லியன் டாலர்கள் கரோனா உதவித்தொகையின் ஒரு பகுதியாகும் இது, இதில் 1.4 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியாவுக்கு மருத்துவ உதவியாக அமெரிக்கா 20 ஆண்டுகளாக அளித்து வரும் தொகையில் உள்ளடங்கியதாகும்” என்று அமெரிக்கா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசுத்துறை மற்றும் அமெரிக்க பன்னாடு வளர்ச்சி முகமை தற்போது 508 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக மருத்துவம், மனிதார்த்த மற்றும் பொருளதார மேம்பாட்டுக்காக ஒதுக்கியுள்ளது.
இது தவிர அரசு சாரா சமூக நல அமைப்புகளுக்கு உலகம் முழுதும் கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராட நிதியுதவி அளித்துள்ளது அமெரிக்கா.
இது போக ஆப்கானிஸ்தானுக்கு 18 மில்லியன் டாலர்கள், வங்கதேசத்துக்கு 9.6 மில்லியன் டாலர்கள், பூடானுக்கு 5 லட்சம் டாலர்கள், நேபாளுக்கு 1.8 மில்லியன் டாலர்கள், பாகிஸ்தானுக்கு 9.4 மில்லியன் டாலர்கள், இலங்கைக்கு 1.3 மில்லியன் டாலர்கள் உதவித்தொகையை அமெரிக்கா வழங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT