Published : 22 Aug 2015 10:21 AM
Last Updated : 22 Aug 2015 10:21 AM
மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹாதிர் முகமது கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் மலேசிய பிரதமர் ரஸாக்குக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
ஊழல், நிதி முறைகேடு, துணைப் பிரதமர் நீக்கம், தலைமை வழக்கறிஞர் மாற்றம், அரசு முதலீட்டு நிதிய (1எம்டிபி) நிதி மோசடி வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் இடமாற்றம் என அவர் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்துகொண்டேயிருக்கின்றன.
இந்நிலையில், மலேசியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவரான மஹாதிர், தற்போ தைய பிரதமர் ரஸாக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டார். அவருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
“அரசுத் துறைகளில் கவர்ச்சி கரமான பதவிகளைக் கொடுத்தி ருப்பதன் மூலம் எம்.பிக்களை தனக்கு விசுவாசம் மிக்கவர்களாக மாற்றிக் கொண்டுள்ளார் ரஸாக். அவர் மீது உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு முன்பு ரஸாக் மீது என்னிடம் புகார் கூறியவர் களுக்கு கூட பதவிகள் வழங்கப்பட் டுள்ளன. எனவே, அவர்கள் தங்க ளின் நிலையை மாற்றிக் கொண்டு விட்டனர் ” என மஹாதிர் தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்.
தற்போது 90 வயதாகும் மஹாதிர், நாட்டில் இன்னும் செல் வாக்கு மிக்கவராகவே உள்ளார். அரசு முதலீட்டு நிதிய முறைகேடு தொடர்பாக பிரதமர் பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT