Published : 15 Apr 2020 01:34 PM
Last Updated : 15 Apr 2020 01:34 PM
கரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே, தென்கொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தள்ளி வைத்துள்ள நிலையில், தென்கொரியா தேர்தலை நடத்தி வருகிறது.
கரோனா வைரஸ் காரணமாக தென்கொரியாவில் 10,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 225 பேர் பலியாகியுள்ளனர். பிப்ரவரியில் தென்கொரியாவில் கரோனா வைரஸ் நோயின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது கரோனா வைரஸ் தொற்று கணிசமான அளவில் அந்நாட்டில் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் போராட்டங்களுக்கு இடையே நாடாளுமன்றத் தேர்தலை அந்நாடு நடத்தி வருகிறது.
நாட்டில் 300க்கும் அதிகமான இடங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் போதிய சமூக விலகலைக் கடைப்பிடித்து வரிசையாக வாக்களித்து வருகின்றனர்.
குடியரசுக் கட்சிக்கும், கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. தென்கொரியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இத்தேர்தலில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வெற்றி பெற்றால் பொருளாதார ரீதியாக அந்நாட்டை உயர்த்த கூடுதல் பலம் கிடைக்கும் என்று தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT