Last Updated : 15 Apr, 2020 11:44 AM

2  

Published : 15 Apr 2020 11:44 AM
Last Updated : 15 Apr 2020 11:44 AM

அமெரிக்காவின் மாபெரும் பொருளாதார புத்தெழுச்சிக் குழுவில் சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா உட்பட 6 இந்திய-அமெரிக்கர்கள்: ட்ரம்ப் அறிவிப்பு

கரோனா வைரஸ் கொடூரமாகப் பாதிக்கப்பட்டு மரண விகிதத்தில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்து அதிலிருந்து மீட்டெடுக்க அதிபர் ட்ரம்ப் மாபெரும் அமெரிக்க பொருளாதார புத்தாக்க மீட்டெழுச்சி தொழிற்துறை குழு (Great American Economic Revival Industry Group)என்பதை உருவாக்கியுள்ளார்.

இதில் கூகுளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெள்ளா உட்பட 6 இந்திய-அமெரிக்க கார்ப்பரேட் தலைவர்களை இணத்துள்ளார். இவர்கள் ட்ரம்புக்கு பொருளாதார புத்தெழுச்சிக்கான ஆலோசனைகளை வழங்குவார்கள்

இந்தக் குழுவில் அமெரிக்காவைச் சேர்ந்த 200 முன்னணி தொழிற்துறை தலைவர்களை ட்ரம்ப் சேர்த்துள்ளார், இவர்கள் பலதரப்பட்ட வர்த்தகத் துறைகளைச் சார்ந்தவர்கள்.

”இவர்கள்தான் அந்தப் பெயர்கள், இவர்கள்தான் புத்திசாலியானவர்கள், பிரகாசமானவர்கள், இவர்கள்தான் நமக்கு புதிய யோசனைகளை வழங்கவுள்ளனர்” என்றார் ட்ரம்ப்.

இந்த மகா கார்ப்பரேட் குழுவில் சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா ஆகியோருடன் ஐபிஎம் நிறுவனத்தின் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, ஆகிய இந்தியர்கள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எலிசன், ஃபேஸ்புக்கின் மார்க் ஸுக்கர்பர்க் ஆகியோர் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் உள்ளனர்.

உற்பத்தித் துறையில் இந்திய அமெரிக்க ஆன் முகர்ஜி, கேட்டர்ப்பில்லரின் ஜிம் அம்ப்லிபி, டெல்சாவ்ன் எலான் மஸ்க், ஃபியட் க்ரைஸ்லரின் மைக் மேன்லி, ஃபோர்டின் பில் ஃபோர்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நிதிச்சேவையில் மாஸ்டர் கார்டிலிருந்து அஜய் பங்கா, வீசாவிலிருந்து அல் கெல்லி, உள்ளிட்டோர் ஆலோசனைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதோடு வேளாண்மை, பேங்க்கிங், கட்டுமானம்/தொழிலாளர் துறை, பாதுகாப்பு, எரிசக்தி, நிதிச்சேவைகள், உணவு மற்றும் பானங்கள், ஆரோக்கியம், ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறை, உற்பத்தி, ரியல் எஸ்டேட், சில்லரை விற்பனை, தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, போக்குவரத்து, விளையாட்டு, மற்றும் சிந்தனை தலைவர்கள் முதலியோரை பொருளாதார புத்தெழுச்சிக்காக அறிவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

“அமெரிக்காவின் ஆரோக்கியமும் செல்வமும் முதன்மை குறிக்கோள், இந்த ஆலோசனைக் கார்ப்பரேட் குழுக்கள் தனித்துவ, சுதந்திர, தன்னிறைவு மற்றும் உறுதியான தேசத்தை உருவாக்குவார்கள்” என்று வெள்ளை மாளிகை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 25,000 பேர்களுக்கும் அதிகமாக கரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர். 6 லட்சத்து 5, 000 த்திற்கும் மேற்பட்டோர் கரோனா பாசிட்டிவில் உள்ளனர்.

உலக அளவில் 126,722 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 20 லட்சம் பேர்களுக்கு உலகம் முழுதும் கரோனா தொற்று பரவியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x