Published : 14 Apr 2020 03:21 PM
Last Updated : 14 Apr 2020 03:21 PM
ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,102 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய நோய் ஆராய்ச்சி மையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,774 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,102 ஆக அதிகரித்துள்ளது. 170 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் சுமார் 1,470 பேர் இதுவரை கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்ய அதிபர் புதின் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து அங்கு அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு நிலவுகிறது. மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 19,25,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,718 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT