Published : 11 Apr 2020 08:55 PM
Last Updated : 11 Apr 2020 08:55 PM
ஆப்கானிஸ்தானில் அதிபர் மாளிகையில் பணிபுரியும் 20 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் அதிபர் மாளிகையில் பணிபுரிந்த 20 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று செய்தி வெளியானது.
காபூலில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை தலைவர் அசாதுல்லா எஸ்மத் கூறும்போது, “எங்களிடம் போதுமான மருத்துவ உபகரணங்கள் இருப்பின் எங்களது பரிசோதனை எண்ணிகையும் அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானிக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் 555 பேருக்கு இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் கரோனா வைரஸால் பலியாகியுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT