Published : 11 Apr 2020 10:49 AM
Last Updated : 11 Apr 2020 10:49 AM
உலக சுகாதார அமைப்புக்கு நிதி அளிப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. உலக சுகாதார அமைப்புதான் அரசியல் செய்து சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்று விமர்சித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்த அமைப்புக்கு நிதியை நிறுத்தப்போகிறோம் என்றும் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் கரோனா வைரஸால் அமெரிக்காவில் முடக்கப்பட்டிருக்கும் பொருளாதாரம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ நான் மிகப் பெரிய முடிவை எடுக்க இருக்கிறேன். நான் எடுக்கும் முடிவு சரியான முடிவு என்று கடவுளிடம் மட்டும் நம்புகிறேன். நான் இதுவரை என் வாழ்கையிலேயே எடுத்த முடிவுகளிலேயே கடினமாக முடிவாக இருக்கும்” என்றார்.
மேலும் உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதி அளிப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என்றும் இது தொடர்பாக நிறைய பேச வேண்டியது உள்ளது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,108 பேர் பலியாகியுள்ளனர்.இதன் மூலம் உலக நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் ஏற்பட்ட அதிகப்பட்ச உயிரிழப்பாக இது பதிவாகி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவ பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்ட தகவலில், “அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,108 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18,586 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் கரோனா வைரஸால் 4 லட்சத்து 96 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் அமெரிக்காவில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT