Published : 11 Apr 2020 09:52 AM
Last Updated : 11 Apr 2020 09:52 AM
உலகிலேயே மிக மோசமாக ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா வைரஸால் உயிரிழப்பைச் சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தி்ல் அமெரிக்காவில் 2,108 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்
கரோனா வைரஸால் உலகிலேயே மோசமாக பாதிக்கப்படும் நாடாக நாளடைவில் அமெரிக்கா மாறிவிடும் அளவுக்கு மனதை பதைபதைக்கவைக்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் உருவான சீனாவில் 3,339 பேர் உயிரிழந்திருந்தார்கள்,88 ஆயிரம் பாதிக்கப்பட்டார்கள்.
ஆனால் அனைத்தையும் மிஞ்சி, இத்தாலியின் உயிரிழப்பைக்காட்டிலும் அமெரிக்கா மிஞ்சிவிடும் சூழல் இருக்கிறது. அமெரிக்காவின் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டிருப்பதாவது:
அமரி்க்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கரோனா வைரஸால் 2 ஆயிரத்து 108 பேர் உயிரிழந்துள்ளார்கள். ஒட்டுமொத்தமாக அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 786 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் அமெரிக்காவில் 33 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உலகளவில் இத்தாலிதான் கரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்பைச் சந்தித்துள்ளது. இதுவரை அந்நாட்டில் 18 ஆயிரத்து 849 பேர் உயிரிழந்துள்ளார்கள். ஆனால், அமெரிக்காவின் நிலைமை இத்தாலியோடு ஒப்பிடும் போது வரும் நாட்களில் இத்தாலியின் உயிரிழப்பை அமெரிக்கா மிஞ்சிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
ஸ்பெயினில் 16 ஆயிரத்து 81 பேரும், பிரான்ஸில் 13 ஆயிரத்து 197 பேரும் இதுவரை கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார்கள்
கரோனாவுக்கு அமெரிக்காவில் 5 லட்சம் பேரும், ஸ்பெயினில் 1.58 லட்சம் மக்களும் , இத்தாலியில் 1.47 லட்சம் மக்களும், பிரான்ஸில் 1.24 லட்சம் மக்களும், ஜெர்மனியில் 1.22 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் வர்த்தக மாநகரான நியூயார்க் நகரில் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு 1.70 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெள்ளை மாளிைக வெளியிட்ட அறிக்கையின்படி அமெரிக்காவில் அடுத்த இருவாரங்களில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை மக்கள் உயிரிழக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அதிபர் ட்ரம்ப் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், அமெரிக்காவில் உயிரிழப்பு 60 ஆயிரதத்துக்கும் கீழேதான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் அல்ல எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT