Published : 11 Apr 2020 09:17 AM
Last Updated : 11 Apr 2020 09:17 AM
கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் போடப்பட்டுள்ள லாக்டவுனை வைரஸை ஒழி்க்கும் முன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால், மிக ஆபத்தான வேகத்தில் கரோனா வைரஸ் மீள்எழுச்சி பெற்று விடும், பேரழிவைக் கொடுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானாம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சில நாடுகள் அந்த பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்தும் முன்பே லாக்டவுனை நீ்க்கவோ அல்லது கட்டுப்பாடுகளை தளர்த்தவோ முடிவெடுக்கிறார்கள். ஆனால், அது மிகப்பேரழிவான முடிவுக்கு இட்டுச்செல்லும்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில்தான் லாக்டவுன் உத்தரவி்ட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள். ஆனால், கரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரும் முன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால், கரோனா வைரஸ் மீள் எழுச்சி பெற்று மோசமான பேரழிவுகளைத் தரும்.
அதனால்தான் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் கட்டுப்பாடுகளை உடனடியாகத் தளர்த்தாதீர்கள், சிறிது சிறிதாக கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது.
லாக்டவுனை நீ்க்கும் முன் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய 6 முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக பரவலைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும், இரண்டாவதாக மக்களுக்கு போதுமான அளவு பொதுச்சுகாதாரச் சேவையை தயாராக ைவத்திருக்க வேண்டும், மூன்றாவதாக வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும்,
நான்காவதாக பணியிடங்களிலும், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும், 5வதாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை சரியாக சோதனைக்கு உட்படுத்தும் வழிகளை கையாளவேண்டும், 6-வதாக அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு விஷயங்களையும், கரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் சென்ற சேர்ந்திருக்க வேண்டும. இவை அனைத்தையும் முழுமையாக செய்த பின்புதான் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு செய்ய வேண்டும்
ஐரோப்பாவில் ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற கரோனா பாதி்த்த நாடுகளில் உயிரிழப்பு குறைந்து வருவதும், பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது.
அடுத்ததாக ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதாக ஆப்பிரி்க்க நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக ஆப்பிரிக்க கிராமங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
எங்களின் ஆய்வுகளின்படி கரோனா பாதித்த 16 நாடுகளில் சமூகப் பரவல் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறோம்
இவ்வாறு டெட்ரோஸ்தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT