Last Updated : 09 Aug, 2015 11:42 AM

 

Published : 09 Aug 2015 11:42 AM
Last Updated : 09 Aug 2015 11:42 AM

மாலி ஹோட்டலில் தீவிரவாத தாக்குதல்

மாலி நாட்டில் செவாரே என்கிற நகரத்தில் உள்ளது ஹோட்டல் பைப்லோஸ். இந்த ஹோட்டலை கடந்த வெள்ளிக்கிழமை காலை இரண்டு தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

அப்போது அந்த ஹோட்டலில் உள்ளூர்வாசிகள் சிலருடன், மூன்று தென்னாப்பிரிக்கர்களும், ஒரு பிரெஞ்சுக்காரரும் மற்றும் ஒரு உக்ரேனியரும் என ஐந்து வெளிநாட்டுவாசிகளும் தங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் பினையக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அன்று இரவே மாலி ராணுவத்தினர் அந்தத் தீவிரவாதிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். பல மணி நேர மோதலுக்குப் பிறகு அந்த ஐந்து வெளிநாட்டுவாசிகளையும் சேர்த்து இதர பினையக் கைதிகளை ராணுவத்தினர் மீட்டனர்.

இந்த மோதலில், மாலி ராணுவத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள், தாக்குதல் நடத்திய அந்த இரண்டு தீவிரவாதிகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x