Published : 10 Apr 2020 01:03 PM
Last Updated : 10 Apr 2020 01:03 PM
கடந்த சில நாட்களாக இத்தாலியில் உயிரிழப்பு குறைவு, பாதிப்பு குறைவு, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை இத்தாலி மக்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலி நோய் தடுப்பு மையம் தரப்பில், “இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 610 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 18, 279 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இத்தாலியில் கரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை, இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே வணிகம் மற்றும் தொழிலாளர் தலைவர்களுடன் ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஒரு மாதமாக கரோனா வைரஸுக்கு உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலியில் உயிரிழப்பு குறைவு, பாதிப்பு குறைவு, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை இத்தாலி மக்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT