Last Updated : 09 Apr, 2020 08:38 AM

 

Published : 09 Apr 2020 08:38 AM
Last Updated : 09 Apr 2020 08:38 AM

அமெரிக்காவில் 4 இந்திய டாக்ஸி ஓட்டுநர்கள் உட்பட 11 இந்தியர்கள் கரோனாவுக்குப் பலி: 16 பேருக்கு  ‘பாசிட்டிவ்’

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 11 இந்தியர்கள் பலியாகியுள்ளனர், மேலும் 16 பேர்களுக்கு கரோனா வைரஸ் பாசிட்டிவ் ஆகியுள்ளது.

பலியான அனைவரும் ஆண்கள், 10 பேர் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் 4 பேர் நியூயார்க் நகரில் டாக்ஸி ஓட்டுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் அமெரிக்காவின் கரோனா மையமாகத் திகழ்கிறது. பலி எண்ணிக்கை 6,000த்திற்கும் அதிகமானது. 1,38,000 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. நியூஜெர்சியில் 1500 மரணங்கள் 48,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புளோரிடாவில் ஒரு இந்தியர் பலியாகியுள்ளார். கரோனா பாசிட்டிவ் ஆன 16 இந்தியர்களில் 4 பேர் பெண்கள், இவர்கள் அனைவரும் சுயதனிமையில் உள்ளனர். இவர்கள் இந்தியாவின் உத்தராகண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் உ.பி.யைச் சேர்ந்தவர்கள்.

கரோனா பரவலைத் தடுக்க இறந்தவர்களை அரசு அதிகாரிகளே ஈமச்சடங்குடன் புதைக்கின்றனர், உறவினர்களுக்கும் அனுமதியில்லை என்ற நிலை நீடித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x