Published : 09 Apr 2020 07:47 AM
Last Updated : 09 Apr 2020 07:47 AM
அமெரிக்காவில் 2வது நாளாக தொடர்ச்சியாக 2,000 பேர் கரோனா வைரசுக்குப் பலியாகியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது
செவ்வாயன்று1939 பேர் மரணமென்றால் புதனன்று அந்நாட்டு நேரம் இரவு 8.30 மணியளவில் பலி 1,973 என்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம். இதன் மூலம் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 14, 965 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க பலி எண்ணிக்கை தற்போது ஸ்பெயின் பலி எண்ணிக்கையையும் கடந்து விட்டது. ஸ்பெயினில் 14, 555 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் பலி எண்ணிக்கை 17,669 ஆக அதிகரித்துள்ளது.
மரண விகிதம் அதிகரித்து வருகிறது வேலையற்றோர் விகிதம் எகிறுகிறது, ஆனால் அதிபர் ட்ரம்ப் ‘சுரங்கத்தின் முடிவில் ஒளி தெரிகிறது’ என்கிறார்.
கரோனா வைரஸுக்கு உலகம் முழுதும் 86,000 பேர் பலியாகியுள்ளனர், உலகம் முழுதும் பலகோடி மக்கள் வேலையின்றி வீட்டில் முடங்கியுள்ளனர்.
ஆனாலும் கட்டுப்பாடுகளை பொருளாதாரத்துக்காக முன் கூட்டியே தளர்த்துவது வைரஸ் பரவலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT