Published : 07 Aug 2015 10:49 AM
Last Updated : 07 Aug 2015 10:49 AM
ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள் ளானதில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
தெற்கு பகுதியில் உள்ள ஷாபூல் மாகாணத்தில் இந்த விபத்து நேரிட்டது. ரஷ்ய தயாரிப்பு எம் 17 ரக ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் ஷாபூர் மாகாண தலைநகரில் இருந்து அருகில் உள்ள மற்றொரு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
தொழில்நுட்ப கோளாறு அல்லது மோசமான வானிலை காரணமாக இந்த ஹெலிகாப்டர் விபத்துள்ளாகியிருக்கலாம் என்று ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் தீவிரவாதிகள் சதி ஏதும் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் ஹெலிகாப்டரை தாங்கள் வீழ்த்தியதாக தலிபான் தீவிரவாதிகள் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT