Published : 06 Apr 2020 11:28 AM
Last Updated : 06 Apr 2020 11:28 AM
நியூயார்க்கில் உள்ள உயிரியல் பூங்காவில் முதன்முறையாக மனிதனிடம் இருநது புலி ஒன்றுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு நேற்று மட்டும் ஆயிரத்து 165 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.36 லட்சத்தை தாண்டியுள்ளது
மிக மோசமாக நியூயார்க் நகரம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 4,159 பேர் உயிரிழந்துள்னர் என்று ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கரோனா வைரஸ் ஆராய்ச்சிப்பிரிவான சென்டர் ஃபார் சிஸ்டம்ஸ் சயின்ஸ் அன்ட் எஞ்சினியரிங் தெரிவி்த்துள்ளது. அடுத்ததாக நியூஜெர்ஸியில் 846 பேரும், மிச்சிகனில் 540 பேரும், கலிபோர்னியாவில் 324 பேரும் உயிரிழந்துள்ளனர்
அமெரிக்காவில் அடுத்த இரு வாரங்கள் மோசமான உயிரிழப்பைச் சந்திக்க வேண்டியது இருக்கும், மக்கள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தநிலையில் அங்கு முதன்முறையாக விலங்கிற்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் உள்ள புரோனெக்ஸ் உயிரியல் பூங்காவில் புலி ஒன்றுக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கரோனா தொற்று ஏற்படுவதில்லை என கூறப்பட்டு வந்தநிலையில் முதன்முறையாக மனிதனிடம் இருந்து விலங்கிற்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த உயிரியல் பூங்காவின் தலைமை விலங்கியல் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT