Published : 05 Apr 2020 06:38 PM
Last Updated : 05 Apr 2020 06:38 PM
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பரவியிருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த மாதம் இஸ்லாமியக் குழுவின் வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட 1000 பேர்களை தடம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை அங்கு முடுக்கி விடப்பட்டுள்ளது.
ரைவிண்ட் என்ற ஊரே தனிமைப்படுத்தப்பட்டு விட்டது, நகருக்கு உள்ளே யாரும் செல்ல முடியாது, அவர்களும் வெளியே வர முடியாது.
தப்லிகி ஜமாத்தைச் சேர்ந்த 300 பிரச்சாரகர்கள் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்லனர், இவர்களுக்கு பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது..
பஞ்சாப் மட்டுமல்லாது, ராவல்பிண்டி, ஜீலம், நன்கனா சாஹிப், சர்கோதா, வேஹாரி, ஃபைசலாபாத், கலாஷா காகு, மற்றும் ரஹிம் யார் கான் மாவடட்ங்களைச் சேர்ந்த தல்லிகி ஜமாத் போதகர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தப்லிகி ஜமாத் பெரிய மதவழிபாட்டுச் சடங்கில் பெரிய அளவில் போதகர்கள் மார்ச் மாதம் அதன் தலைமைச் செயலகமான லாகூரில் கலந்து கொண்டனர். இவர்கள் பிற்பாடு தடம் காணப்பட்டு வீட்டோடு முடக்கப்பட்டனர்.
ஜமாத்தின் 50 பேர், நைஜீரியாவைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட கரோனாவுடன் சுற்றித்திரிந்துள்ளது தெரியவந்தது.
ஈரானிலிருந்து திரும்பிய 200 ஷியா முஸ்லிம் யாத்திரிகர்களுக்கு கரோனா பாசிட்டிவ் ஆக இவர்கள் முல்டான் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் மட்டுமல்ல கரோனா வைரஸைச் சுமந்து செல்பவர்களாக தப்லிகி ஜமாத் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் கருதப்படுவது இந்தியா, மலேசியா, புருனேய் ஆகியவற்றிலும் தொடர்கிறது
பாகிஸ்தானில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 2,883 ஆக அதிகரித்துள்ளது, 40 பேர் மரணமடைந்துள்ளனர், பஞ்சாபில் அதிகபட்சமாக 1,196 கேஸ்கள், சிந்த் மாகாணத்த்ல் 830.
உலகம் முழுதும் 12 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 65,000 பேர் மரணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT