Published : 03 Apr 2020 09:36 AM
Last Updated : 03 Apr 2020 09:36 AM
இந்தியாவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2500 ஆக அதிகரித்துள்ள நிலையில் உலக வங்கி கரோனா வைரசை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர்கள் தொகையை அவசரகால நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு 200மில் டாலர்கள், ஆப்கானுக்கு 100மில். டாலர்கள், மாலத்தீவுகளுக்கு 7.3 மில்லியன் டாலர்கள், இலங்கைக்கு 128.6 மில்லியன் டாலர்கள் வழங்குகிறது உலக வங்கி.
உலக வங்கியின் முதற்கட்ட உதவி 1.9 பில்லியன் டாலர்களாகும், இது 25 நாடுகளுக்கான உதவித்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 40 நாடுகளுக்கு நீட்டிக்கப்பட்டு விரைவு கதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதில் இந்தியாவுக்குத்தான் அதிக அவசரலாக நிதியாக 1 பில்லியன் டாலர்களை அறிவித்துள்ளது.
இதன் மூலம், “சிறந்த தடம்காணும் முறை, தொடர்பு தடம்காணுதல், மருத்துவப் பரிசோதனை நிலையங்கள், தனிப்பட்ட பாதுகாப்புக் கவசங்கள், புதிய தனிமைப்பிரிவு வார்டுகள் ஆகியவற்றை உருவாக்கலாம்” என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தாக்கத்தின் தீவிரத்தைக் குறைக்க அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர்கள் உதவித்தொகை அறிவிக்கவுள்ளது. உலகின் ஏழை மக்கள் சுற்றுச்சூழல் ஆகியவைதான் பிரதான கவனம். மேலும் விரைவில் இதிலிருந்து மீள்வது பொருளாதார சரிவையும் தடுக்கும் என்கிறது உலகவங்கி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT