Published : 01 Apr 2020 08:09 AM
Last Updated : 01 Apr 2020 08:09 AM
இத்தாலி குடிமை பாதுகாப்புத் துறை தலைவர் அஞ்சேலோ போரெலி தொலைக்காட்சி செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு கூறும்போது, புதிதாக தொற்றியவர்கள் எண்ணிக்கை செவ்வாயன்று 2,107 என்றும் மொத்தமாக நாடு முழுதும் 77,365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதில் 28,192 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், இதில் 4,023 பேர் ஐசியுவிலும் 45,420 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திங்கட்கிழமையை ஒப்பிடும் போது 1,109 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 15,729 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
செவ்வாயன்று பலி எண்ணிக்கை 837 ஆகும், இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,428 ஆக அதிகரித்துள்ளது. பிப்ரவரி 21ம் தேதி வடக்கு இத்தாலியில் ஆரம்பித்தது இந்த கரோனா பயங்கரம்.
கரோனா செயலில் இருக்கும் தொற்று, மரணம், குணமடைந்தோர் ஆகிய எண்ணிக்கைகளை மொத்தமாகப் பார்த்தால் 105,792 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய சுகாதார நிறுவனத் தலைவர் சில்வியோ புரூசஃபெரோ கூறும்போது, “இப்போது நமது தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டு வழிமுறைககள் வேலை செய்ய தொடங்கியுள்ளன, அதற்காக நாம் கரோனாவை வென்று விட்டோம் என்று பொருளல்ல, போர் இன்னும் முடியவில்லை, ஆனால் அதன் குறைவை பார்த்து வருகிறோம். நம் நடத்தையைப் பொறுத்து இன்னும் குறையும்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT