Published : 01 Apr 2020 07:33 AM
Last Updated : 01 Apr 2020 07:33 AM
கரோனா வைரஸ் பரவலின் வேகம், அதன் தன்மை ஆகியவற்றைக் கொண்டு பன்கணிப்பு மாதிரியில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவிக்கும் போது சுமார் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அமெரிக்காவில் பலியாவதை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது., சமூகவிலகல் தவிர வேறு மருந்தில்லை, வழியில்லை என்று தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை கரோனா ரெஸ்பான்ஸ் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பிரிக்ஸ் கூறும்போது, “மந்திர புல்லட் இல்லை, மந்திர வாக்சைனும் இல்லை. நம் நடத்தைகள்தான் தீர்மானிக்கிறது. நம் ஒவ்வொருவரின் நடத்தையும் வேறு ஒன்றாக மாற்றமடைந்து அது இந்த வைரலின் நடத்தையை தீர்மானிக்கிறது, இதுதான் அடுத்த 30 நாட்களுக்கான நிலவரம்.” என்றார்.
மற்றொஉ மருத்துவரனா டாக்டர் ஆண்டனி ஃபாஸி கூறும்போது, “அமெரிக்கர்கள் பெரிய அளவிலான மரண எண்ணிக்கைக்கு தங்கள் மனதை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இது கணிப்புதான் ஆனாலும் அதுதான் நிலைமை. நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். இதைத்தான் நாம் எதிர்பார்க்க வேண்டும். ஆனால் இதுதான் நடக்கும் என்று நாம் ஏற்று கொள்ள வேண்டியதில்லை, நாம் இதனை முடிந்தவரையில் தடுக்கப் பாடுபடுவோம்” என்றார்.
எல்லா கரோனா வரைபடங்களிலும் நியூயார்க், நியு ஜெர்சி பெரிய பாதிப்புப் பகுதிகளாக காட்டப்படுகிறது.
நியூயார்க், நியுஜெர்சி, கனெக்டிகட் ஆகிய இடங்கள் வைரல் சுமை அதிகமாக உள்ளது. சுகாதார அளவியல் மற்றும் மதிப்பிட்டு நிறுவனமான IHME ஆகஸ்ட் தொடக்கத்தில் அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 84,000த்தை தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 முதல் தினசரி ஏற்பட்டு வரும் மரண எண்ணிக்கையிலிருந்து இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்க மக்கள் எங்கு சென்றாலும் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் முழு அடைப்பை பரிந்துரை செய்யவில்லை. 6 அடி இடைவெளி விட்டால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்” என்று டாக்டர் பர்க்ஸ் கூறியுள்ளார்.
இத்தாலியை உதாரணம் காட்டிய டெபோரா பர்க்ஸ் “புதிய தொற்றுகள் அங்கு குறைந்து வருகின்றன. ஒரு சமூகமாக விலகலைத் தொடர்ந்து கடைபிடிப்பதன் பலன்களை அவர்கள் உலகுக்குக் காட்டியுள்ளனர்” என்று அமெரிக்கர்களுக்கும் சுய-கட்டுப்பாட்டை வலியுறுத்தினார்.
சமூக விலகல் என்ற ஒற்றை மந்திரமே ஒரே வழி, இதுதான் மருந்து என்று டாக்டர் ஃபாஸி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT