Published : 29 Mar 2020 06:40 PM
Last Updated : 29 Mar 2020 06:40 PM

கனடா பிரதமரின் மனைவி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி குணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 5,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவிட்-19 காய்ச்சல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியா ட்ரூடோவுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சோபியா ட்ரூடோ கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோபியா ட்ரூடோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ நான் முன்பை விட நலமாக இருக்கிறேன். எனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் என் இதயத்தின் அடியிலிருந்து நன்றி கூறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர். கோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x