Published : 29 Mar 2020 02:37 PM
Last Updated : 29 Mar 2020 02:37 PM

சீனாவில் புதிதாக 45 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: 5 பேர் பலி

சீனாவில் புதிதாக 45 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சீனாவில், சமீப நாட்களாக புதிதாக கரோனா வைரஸ் தொற்று பரவல் கணிசமான அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கோவிட்-19 (கரோனா வைரஸ்) நோய்த்தொற்று புதிதாக 45 பேருக்கு ஏற்பட்டுள்ளது என்று சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இதுவரை 81,439 பேர் பலியாகினர். சுமார் 3,300 பேர் பலியாகினர். சுமார் 75 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹாங்காங்கில் சுமார் 560 பேர் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர். கோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x