Last Updated : 27 Mar, 2020 04:28 PM

 

Published : 27 Mar 2020 04:28 PM
Last Updated : 27 Mar 2020 04:28 PM

கரோனா நோயாளிகளுக்காக மட்டுமே பிரத்யேக 10,000 வென்ட்டிலேட்டர்கள்: பிரிட்டன் நிறுவனம் டைசன் தயாரிப்பு

பிரிட்டனில் கரோனா நோயாளிகளின் பாதிப்பு எண்ணிக்கை மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட குறைவாக இருந்தாலும் அங்கும் நோயைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரபல நிறுவனமான டைசன், கரோனா நோயாளிகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 10,000 வென் ட்டிலேட்டர்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இவை அடுத்த மாதத்தில் தயாராகி விடுவதாக நிறுவன தலைவர் ஜேம்ஸ் டைசன் தெரிவித்துள்ளார்.

கோவென்ட் என்று பெயரிடப்பட்ட இந்த வென் ட்டிலேட்டர்கள் கரோனா வைரஸ் தொற்று மூச்சுப்பாதை, நுரையீரலைத் தாக்குவோருக்கு பெரிய பயனுள்ளதாக அமையும் என்று ஜேம்ஸ் டைசன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இவ்வகை வென் ட்டிலேட்டர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் முதலில் 5,000 வென் ட்டிலேட்டர்கள் பிரிட்டனுக்கு இலவசமாக வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உலக நாடுகளிலும் டைசன் வென் ட்டிலேட்டர்களுக்கு தேவைப்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x