Published : 27 Mar 2020 02:06 PM
Last Updated : 27 Mar 2020 02:06 PM
வடக்கு மெக்சிகோவில் உள்ள எல்லை மாநிலமான சிஹுவாஹுவாவில் மெக்சிகோ அணியிலிருந்து அமெரிக்காவுக்கு நீர்க்கடனை அடைப்பதற்காக தண்ணீர் திறந்து விடப்படுவதை எதிர்த்து வாகனங்களை எரித்து சாலைமறியலில் ஈடுபட்டது பரபரப்பாகியுள்ளது.
இது தொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் பகிர்ந்த வீடியோவில் நெடுஞ்ச்சாலை மறிக்கப்பட்டுள்ளது, இரண்டு ட்ரக்குகள் கொளுத்தப்பட்டுள்ளதும் காட்டப்பட்டுள்ளது. இன்னொரு வீடியோவில் ஆர்ப்பாட்ட விவசாயிகள் அமெரிக்காவுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் லா பொக்கில்லா அணையின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது பதிவாகியுள்ளது.
சிஹுவா மாநில ஆள்நர் ஜேவிய கோரல், தண்ணீர் திறப்பதை நிறுத்துங்கள், மாநில விவசாயிகளுக்கு போதிய நீராதாரம் இருக்காது என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் அமெரிக்காவுக்கு தண்ணீர் திறப்பதன் மூலம் சில இடங்களில் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே 1944ம் ஆண்டு இருதரப்பு நீர்ப்பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் படி மெக்சிகோ அமெரிக்காவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தின் படி இருதரப்பிலிருந்தும் பரஸ்பரம் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால் இதில் மெக்சிகோ பின் தங்கியதால் தண்ணீர்க்கடனில் சிக்கியது.
போராட்டங்களை அடுத்து தண்ணீர் திறந்துவிடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது பிற்பாடு மழை பெய்தால் அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டிய தண்ணீர் கடனை அளிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மெக்சிகோ அதிபர் ஆந்த்ரஸ் மேனுயெல் லூபெஸ் ஆப்ரடார் கூறும்போது உள்ளூர் விவசாயிகளுக்கும் போதும், அமெரிக்காவுக்கும் தண்ணீர் திறந்து கடனை அடைக்கலாம் என்றார்.
“சர்வதேச சிக்கலில் சிக்க விரும்பவில்லை, ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது நம் கடமை, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அதைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்.
இந்த தண்ணீர் பகிர்வு ஒப்பந்தத்தின் படி மெக்சிகோ ஒவ்வொரு 5 ஆண்டும் அமெரிக்காவுக்கு 1.75 ம்ல்லியன் ஏக்கர் அடி நீர் திறந்து விட வேண்டும். அமெரிக்கா இதற்குப் பதிலாக தன் பிற நீராதாரங்களிலிருந்து மெக்சிகோவுக்கு நீர் தர வேண்டும்.
ஆனால் அதிபர் ஆப்ரடார் பதவியேற்ற பிறகு அமெரிக்காவுக்கு குறைந்த அளவு தண்ணீரையே அளித்து வருகிறது. ஜனவரி மாதத்தின் படி 478000 ஏக்கர் அடி தண்ணீர் மெக்சிகோ கணக்கில் அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டியுள்ளது. இதுதான் தற்போது அங்கு சிக்கலாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT