Published : 27 Mar 2020 10:04 AM
Last Updated : 27 Mar 2020 10:04 AM

கரோனா வைரஸ்: இத்தாலி, சீனாவைக் கடந்த அமெரிக்கா : 83,000 பேருக்கு  கோவிட்-19 ‘பாசிட்டிவ்’

உலகம் முழுதும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,10,000; 23,993 மரணங்கள். அமெரிக்காவில் 83,000 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆகி எண்ணிக்கையில் இத்தாலி, சீனாவைக் கடந்துள்ளது.

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,178 ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க் நகரில் ஒரேநாளில் 100 பேர் பலியாகியுள்ளனர்.

40% மக்களுக்கும் மேல் லாக் டவுனில் உள்ளனர். அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “நிதி, அறிவியல், மருத்துவ ரீதியில் கரோனாவுக்கு எதிராக போரைத் தொடுத்துள்ளோம். மக்கள் லாக்-டவுனை மதித்து கரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கரோனா லாக் டவுனிலா பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் நிலையில் ஜி20 தலைவர்கள் வீடியோ உரையாடலில் கூறும்போது 5 ட்ரில்லியன் டாலர்களை உலகப் பொருளாதாரத்தை தக்கவைக்க செலுத்தியுள்ளோம். மேலும் வளரும் நாடுகளுக்கு பெரிய அளவில் உதவவிருக்கிறோம்.

ஐரோப்பிய யூனியன் மேற்கொண்ட வரைவு பொருளாதார மாதிரி மிகவும் பலவீனமாக இருப்பதாக இத்தாலியும் ஸ்பெயினும் விமர்சனம் செய்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்கா தத்தளித்து வருகிறது. நியூயார்க்கில் மட்டும் பலி எண்ணிக்கை 385 ஆக அதிகரித்துள்ளது. 37,258 பேர்களுக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x