Last Updated : 27 Mar, 2020 09:16 AM

 

Published : 27 Mar 2020 09:16 AM
Last Updated : 27 Mar 2020 09:16 AM

மீண்டுவரும் சீனா: வுஹானில் புதிதாக கரோனா நோயாளி ஒருவர் கூட இல்லை; வெளிநாட்டவர்கள் நுழைய தடை

கோப்புப்படம்

பெய்ஜிங்


கரோனா வைரஸ் அரக்கனின் பிடியிலிருந்து மீண்டுவரும் சீனா, வெளிநாட்டு பயணிகள் அந்நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மூலம் புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடித்ததையடுத்து, ஒட்டுமொத்தமாக வெளிநாட்டினர் வருகைக்கு தடை விதி்த்தது.

அதேசமயம் கரோனா வைரஸ் உருவான வுஹான் நகரில் நேற்று புதிதாக ஒருவர்கூட கரோனா நோயால் பாதிக்கப்படவில்லை. ஆனால், வுஹான் நகரம் அமைந்திருக்கும் ஹுபே மாகாணத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஏறக்குறைய கரோனா வைரஸ் அரக்கனின் பிடியிலிருந்து சீனா ஏறக்குறைய முழுமையாக தன்னை விடுவித்துக்கொண்டு வருகிறது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் “ புதிதாக 55 ேபருக்கு மட்டும் கரோனா வைரஸ் பரவியுள்ளது, அதில் 54 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர் மட்டும் உள்நாட்டவர்.

வெளிநாடுகளில் ஏராளமான சீனர்கள் வசித்து வருவதால், அவர்கள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக மாணவர்கள் அதிகமாக வருகிறார்கள். அவர்கள் மூலம் கரோனா வைரஸ் பரவுகிறது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் சீனாவுக்குள் வெளிநாட்டு விமானங்கள் நுழைய 75 சதவீதம் தடை விதிக்கப்பட்டு, வெளிநாட்டினர் முற்றிலுமாக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் விமானத்துக்கு தடையில்லை.

சீனர்கள் அல்லாதவர்கள் சீனாவில் வசித்து தற்போது அவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்கள் மீ்ண்டும் சீனாவுக்குள் வருவதற்கு தற்காலிகமாக தடை விதி்க்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் கரோனா வைரஸ் பரவிய எண்ணிக்கை 595 ஆக அதிகரித்துள்ளது.

பெய்ஜிங் நோக்கி வரும்அனைத்து விமானங்களும் புறநகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டு அங்கு பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பெய்ஜிங், ஷாங்காய் நகருக்குள் புதிதாக யார் நுழைந்தாலும் 14 நாட்கள் சுயதனிமைக்குச் செல்ல வேண்டும்.

சீனாவில் 81,340 ேபர் கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 74,588 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 537 பேர் கரோனா நோயிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் 3,460 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள், ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், 3,292 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x