Published : 25 Mar 2020 03:58 PM
Last Updated : 25 Mar 2020 03:58 PM
வரலாற்றில் முதல் முறையாக காணொலிக் கருத்தரங்கம் வழியாக ஐ.நா. சபை கூடிப் பேசியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், பெரும்பாலான அலுவல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு உத்தரவிட்டுள்ளன. ஏராளமான அலுவல்கள் இணையம் வழியாகவே நடைபெறுகின்றன.
இந்நிலையில் பல்வேறு நாடுகள் கலந்துகொள்ளும் ஐ.நா. சபைக் கூட்டமும் காணொலி வழியாக நடைபெற்றது.
தனிப்பட்ட அலுவல் ரீதியான காரணங்கள் எதுவும் இதில் பட்டியலிடப்படவில்லை. சோதனை அடிப்படையில் இந்தக் கூட்டம் கூடியது. ஆங்கிலத்திலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றதால், மற்ற அதிகாரபூர்வ மொழிகளின் மொழிபெயர்ப்பில் சிரமம் ஏற்பட்டது.
4 மணிநேரத்துக்கும் மேலாக இந்தக் கூட்டம் நீடித்தது. 15 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். மின்சாரத் தடை, இணையத் தாமதம் ஆகிய காரணங்களால் கூட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. எனினும், கூட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு, இடையூறுகளுடன் நடைபெறுவது மேல் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐ.நா. சபையின் தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகரம் தற்போது கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT