Published : 25 Mar 2020 12:40 PM
Last Updated : 25 Mar 2020 12:40 PM
கரோனா வைரசை அடக்க ஒரே வழி லாக் -டவுன் தான், அதனை சீனா கடைபிடித்து இன்று மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் லாக்-டவுன் செய்துள்ளன, ஆனால் இதெல்லாம் சுத்த நான்சென்ஸ் என்கிறார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ.
இவர் எப்போதும் சர்ச்சைகளுக்கு அஞ்சுபவர் அல்ல என்பது உலகம் அறிந்தது, தீவிர வலது சாடி தலைவரான போல்சொரானோ சாவோ போலோ, ரியோ டி ஜெனிரியோவில் அதிகாரிகள் எடுத்துள்ள கட்டுப்பாடுகள் மீது பாய்ந்து, மக்களின் வேலைகளைக் காலி செய்து தவறான வழிகாட்டுதலின் பேரில் இந்த லாக்-டவும் அரங்கேறி வருகிறது என்று சாடியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், “சில மாநிலங்களும், உள்ளூர் அதிகாரிகளும் ‘வறண்ட பூமி’ போன்ற இந்த லாக் டவுன் முறையை ஒழிக்க வேண்டும். போக்குவரத்தை முடக்குதல், வர்த்தகத்தை மூடுதல் மக்களை பெரிய அளவில் சிறைப்படுத்துதல் இவையெல்லாம் தேவையா? நாம் வேலைகளையும் குடும்பங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க வேண்டாமா.
60 வயதுக்கு மேலானோர்தான் ரிஸ்க் எனும்போது ஏன் பள்ளிகளை மூட வேண்டும்? செய்தி ஊடகங்கள் நியாயப்படுத்த முடியாத அளவில் இந்த வைரஸ் குறித்து ஹிஸ்டீரியாவை உருவாக்குகின்றனர். பிரேசில் உஷ்ண நாடு வைரஸ் ஒன்றும் இங்கு செய்ய முடியாது.
இது உடனடியாக முடிக்கப்பட வேண்டும், வாழ்க்கையை நாம் தொடர வேண்டும், சஜக நிலைக்கு நாம் திரும்ப வேண்டும்” என்றார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் பெரிய பொருளாதார நாடு பிரேசில் ஆகும், இதுவரை இங்கு 2201 பேர் பாசிட்டிவ் கரோனா ஆகியுள்ளனர், 46 பேர் பலியாகியுள்ளனர்.
‘வெப்ப மண்டல ட்ரம்ப்’ என்று கேலி செய்யப்பட்டு வரும் பிரேசில் அதிபரின் இந்த பேச்சு வழக்கம் போல் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இவர் உரை நிகழ்த்தும் போதே மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT