Last Updated : 25 Mar, 2020 08:29 AM

 

Published : 25 Mar 2020 08:29 AM
Last Updated : 25 Mar 2020 08:29 AM

அமெரிக்காவில் ஒரேநாளில் 150 பேர் பலி: மேலும் 10,000 புதிய கரோனா வைரஸ் தொற்றுக்கள்- ஈஸ்டரில் எல்லாம் சரியாகி விடும் அதிபர் ட்ரம்ப் ஆறுதல்

வாஷிங்டன்

கரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவிக்கும் உலகின் மிகப்பணக்கார நாடான அமெரிக்காவில் புதிதாக 10,000 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது, மேலும் ஒரேநாளில் 150 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். தேசியக் காவல்படை ஆயுதப்படையினர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். நியூயார்க் நகரில் மட்டும் மேலும் 53 பேர் மரணமடைந்துள்ளனர், புதிதாக 5,000 பேர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்றை தொகுத்து வழங்கும் வேர்ல்டோ மீட்டர் இணையதளத்தின் படி புதிதாக 10,000 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ரிப்போர்ட் ஆகியுள்ளது. இதனையடுத்து மொத்தம் 54,000 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 150 பேர் பலியானதையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்துள்ளது.

நியூயார்க் அல்லாது அடுத்து உள்ள நியூஜெர்சி, கலிபோர்னியா, மிச்சிகன் இல்லினாய், புளோரிடா ஆகியவை கரோனா ஹாட்ஸ்பாட்களாகத் திகழ்கின்றன. ஆனால் வாசிங்டனில் புதிய கரோனா தொற்றோ, மரணமோ இல்லை.

செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறும்போது, 3 வாரங்களில் நிலைமை இயல்புக்குத் திரும்பி விடும், ஈஸ்டர் வாக்கில் அதாவது ஏப்ரல் 12ம் தேதி வாக்கில் அனைத்தும் சரியாகிவிடும் என்று தெரிவித்தார்.

“நம் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடித்து, சமூக இடைவெளியை அனுசரித்து, பெரிய அளவில் கூட்டம் சேராமல், கைகளை கழுவி மற்றும் பிற சுகாதாரங்களை கடைபிடித்தால் விரைவில் மீண்டு விடலாம், கண்ணுக்குத் தெரியா இந்த கரோனா என்ற புதிய எதிரியுடனான வரலாற்றுப் போரின் முடிவை நெருங்கி வருகிறோம்

ஈஸ்டரில் முழுதும் விடுபடுவோம் என்று நம்புகிறேன். இது நம் நாட்டுக்கு பெரிய விஷயம், இதனை உண்மையாக்க நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம்.” என்றார், போராடும் அமெரிக்கர்களுக்கு நேரடியாக பணம் அளிக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 2 ட்ரில்லியன் டாலர்கள் திட்டத்துக்கு காங்கிரஸ் விரைவில் வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப் ஏப்ரல் 12 என்று இறுதிக் கெடு நிர்ணயிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபாவ்சி என்பவர் இது போன்ற கெடுவெல்லாம் நோய்க்கு நிர்ணயிக்க முடியுமா? நாம் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். அவ்வப்போதுதான் முடிவெடுக்க முடியுமே தவிர ஒட்டுமொத்தமாக டெட் லைன் நிர்ணயிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x