Published : 24 Mar 2020 10:52 AM
Last Updated : 24 Mar 2020 10:52 AM
துருக்கியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யூ டி கொலோன் என்ற கிருமி நாசினியைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். எங்கு சென்றாலும் யூ டி கொலோன் அங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
யூ டி கொலோன் அங்கு விருந்தோம்பலின் குறியீடாகவும் சுகாதாரத்தின் உதவியாளராகவும் பார்க்கப்படுகிறது, இதனால் யூ டி கொலோன் தேவை அதிகரிக்க பல கடைகளில், ஷாப்பிங் மால்களில் அங்கு யூ டி கொலோன் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இப்போது அங்கு ஒவ்வொரு வீட்டிலும் யூ டி கொலோன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூ டி கொலோனில் அதிகமாக ஆல்கஹால் உள்ளடக்கம் இருப்பதால் அதன் மூலம் கைகளை அலம்புவது கரோனாவைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது..
இஸ்தான்புலின் சுறுசுறுப்பான சந்தைகளில் யூ டி கொலோனின் விற்பனை அதிகரித்துள்ளது, சில கடைகளில் “இங்கு யு டி கொலோன் ஸ்டாக் இல்லை” என்ற போர்டும் வைக்கப்பட்டுள்ளது.
தெருவில் நடந்து செல்லும் போதே மக்கள் அங்கு யூ டி கொலோனை கைகளில் தெளித்துக் கொண்டே செல்கின்றனர். டாக்ஸி ஓட்டுநர்கள் வாடிக்கையாளர்களுக்கும் கொலோனை அளித்து வருகின்றனர்.
அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெத்தின் கோகா, யூ டி கொலோனை பயன்படுத்துங்கள் என்று கூறியவுடன் கிராக்கி அதிகரித்துள்ளது.
துருக்கியில் இதுவரை 37 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர், 1529 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யூ டி கொலோன் கரோனா வைரஸைத் தடுக்குமா? - விஞ்ஞானம் என்ன கூறுகிறது?
துருக்கி கிளினிக்கல் நுண் உயிரியல் மற்றும் தொற்று நோய் சங்கத்தின் பேராசிரியர் பூலெண்ட் எர்டகுரூல் என்பவர் இது தொடர்பாக ஏஜென்சியிடம் கூறும்போது, “கரோனாவுக்கு எதிராக ஆல்கஹால் ஒரு நல்ல மருந்து, அது கரோனாவின் புறச்சவ்வை அழிக்கிறது. எனவே வெளியில் போய் விட்டு வரும்போது யூ டி கொலோன் மூலம் கையை அலம்புவது நல்லது..
சோப் கிடைக்கவில்லை எனில் 60% ஆல்கஹால் உள்ள சானிட்டைசர்கள் உதவும், இதற்கு யூ டி கொலோன் சிறந்தது, கொலோனில் 70% ஆல்கஹால் உள்ளது. அதனால்தான் அது கோவிட்-19க்கு எதிரான நல்ல சானிட்டைசராக உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT