Published : 23 Mar 2020 09:41 AM
Last Updated : 23 Mar 2020 09:41 AM
கரோனா வைரஸ் உற்பத்தி மையமாக விளங்கிய சீனாவில் தொடர்ச்சியாக 5-வது நாளாக உள்நாட்டு கரோனா தொற்று இல்லை. ஆனால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான கரோனா தொற்றுக்கு மேலும் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா மையமான வூஹானில் மேலும் 9 பேர் பலியாகியுள்ளனர். கரோனா தொற்று பல்கிப்பெருகத் தொடங்கியதையடுத்து வூஹான் நகரம் மற்றும் ஹூபேயின் சுற்றுவட்டாரப்பகுதிகளையும் சேர்த்து 56 மில்லியன் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அங்கு தொடர்ச்சியாக 5வது நாளாக உள்நாட்டில் புதிதாக கரோனா தொற்று ஏற்படவில்லை.
எனவே இப்பகுதியில் பயண மற்றும் பணி மீதான கட்டுப்பாடுகள் மெதுவே அகற்றப்பட்டு இயல்பு நிலை மெல்ல திரும்பிக் கொண்டிருக்கிறாது.
சீனாவில் தொற்றுக் குறையும் அதே வேளையில் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது. உள்நாட்டு தொற்று குறைந்தாலும் சீனாவில் வெளிநாட்டிலிருந்து வரும் தொற்று எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது.
திங்களன்று புதிதாகப் பரவிய கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் 39, இடில் ஷாங்காயில் 10, பெய்ஜிங்கில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நகருக்குள் வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது, பெய்ஜிங் வரும் அனைத்து விமானங்களையும் மற்ற நகரங்களுக்கு திருப்பி அங்கு சோதனை முடிந்த பிறகே வெளிநாட்டுப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இன்னமும் கூட சீனாவில் 81,000 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர், பலி எண்ணிக்கை 3,270 ஆக உள்ளது.
உலகம் முழுதும் 14,400 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT