Published : 22 Mar 2020 02:33 PM
Last Updated : 22 Mar 2020 02:33 PM
கரோனா வைரஸ் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாமல்போனதால், அதற்கான விலையை இப்போது உலகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா தகவல்களை பகிர்ந்து கொள்வதை தாமதப்படுத்தியது. இந்த தகவல்கள் உடனே தெரிந்திருக்க வேண்டியதாகும். அதை தெரிந்து கொள்வதற்கு உலகத்துக்கு உரிமை உள்ளது. உலகத்துக்கு இந்த ஆபத்து இருப்பது முதலில் சீனாவுக்கு தெரியும். மேலும் நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தரவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய சிறப்பு கடமை அவர்களுக்கு உண்டு.
இதில் சீனாவுக்கு முதலில் உதவ விரும்பிய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறபோது, தாமதம் ஆகிற ஒவ்வொரு தருணமும் உலகம் முழுவதற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இப்போதும் கூட, சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு கிடைக்கிற ஒவ்வொரு தகவலையும் உலகத்துக்கு கிடைக்கச்செய்ய வேண்டும். மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயம் ஆகும்.
இது, நிகழ்கால தகவல்களை பகிர்ந்து கொள்வது பற்றியது ஆகும். இது அரசியல் விளையாட்டு அல்ல. பழிவாங்கலும் அல்ல.
டுவிட்டர் மற்றும் உலக அளவில் இருந்து தவறான தகவல்களை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் அரசிடமிருந்து சிலவும், தனிநபர்களிடம் இருந்து பலவும் வந்தன. சீனா, ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள்தான் தவறான தகவல் பரப்புவதில் ஈடுபட்டன என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT