Published : 21 Mar 2020 03:00 PM
Last Updated : 21 Mar 2020 03:00 PM
உலகம் முழுதும் கரோனா வைரஸ் தொற்றினால் பாதுகாப்பாகவும் சுத்தம் சுகாதாரத்துடனும் இருக்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில் துபாயில் கிரேட் 7-ல் படிக்கும் மாணவர் ஒருவர் 30 செமீ தூரத்திலிருந்து கையை நீட்டினாலே சானிடைசரை அளிக்கும் புதிய ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளார்.
துபாயில் உள்ள ஸ்பிரிங் டேல்ஸ் பள்ளியில் படிக்கும் மாணவர் சித் சாங்வி என்ற மாணவர்தான் இந்த ரோபோ சானிடைசர் சாதனையாளர். அதாவது ஹேண்ட் சானிடைசர் பாட்டிலை பலரும் தொட்டுத் தொட்டு பயன்படுத்துவதால் கரோனா வைரஸைத் தடுக்க முடியாது பரவத்தான் செய்ய முடியும் என்று தன் தாயார் காட்டிய வீடியோ ஒன்றினால் உந்துதல் பெற்ர சித் சாங்வி, தொடர்பு இல்லாமல் சானிடைசர் அளிக்கும் ரோபோவை கண்டுபிடிக்கக் காரணம் என்று சித் சாங்வியை மேற்கோள் காட்டி கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொடுதல் மூலம் வேகமாகப் பரவக்கூடிய தொற்றாகும். “எனவே ஸ்டெம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏன் புதிதாக ஒன்றை உருவாக்க முடியாது என்று யோசித்தேன், இதன் மூலம் எந்திரம் ஒன்று தானாகவே சானிடைசரை அளிக்கும் ஒன்றை யோசித்தேன். கையை அருகில் கொண்டு வராமலேயே தொடாமலேயே சானிடைசர் அளிக்கும் கருவி பற்றி யோசித்தேன்.
ரோபாடிக் சானிடைசர் மூலம் கையை கழுவுவது ஒரு சூப்பர் கேளிக்கை. இது கோவிட்-19 அச்சத்திலிருந்து நம்மை விடுவிப்பதோடு நம்மை இது குறித்து ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டும்” என்று கூறும் சிறுவன் சித் சாங்விக்கு ஆர்ட்டிபீஷியல் இண்டெலிஜென்ஸில் மிகுந்த விருப்பம் இருப்பதாக கலீஜ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT