Last Updated : 20 Mar, 2020 06:16 PM

 

Published : 20 Mar 2020 06:16 PM
Last Updated : 20 Mar 2020 06:16 PM

கரோனா அச்சுறுத்தலிலும் உலகிலேயே மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா? - ஐநா தகவல்

உலகமே கரோனா அச்சுறுத்தலில் கவலையுடனும் பீதியுடனும் இருந்து வரும் நிலையில் பின்லாந்து நாடுதான் உலகிலேயே மகிழ்ச்சியான நாடு என்ற தகுதியை 3வது முறையாக வென்றுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

உலக மகிழ்ச்சி அறிக்கைக்கான ஆய்வாளர்கல் சுமார் 156 நாட்களில் உள்ள மக்களிடம் தங்கள் மட்டத்தில் மகிழ்ச்சி என்றால் என்னவென்பது பற்றி சுய-மதிப்பீடு செய்யுமாறு கோரியது, அதாவது ஜிடிபி, சமூக இணக்கம், ஆதரவு, தனிமனித சுதந்திரம், ஊழலின் அளவு ஆகியவற்றை அளவு கோலாகக் கொண்டு சுயமதிப்பீடு செய்யும்மாறு கோரப்பட்டது.

இதற்கு முந்தைய 7 அறிக்கைகளிலும் நார்டிக் நாடுகளே டாப் ட்10-ல் இடம்பெற்றன, அதாவது சுவிட்சர்லாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரியா உள்ளிட்டவை இடம்பெற்றன.

ஆனால் இம்முறை லக்சம்பர்க் கூட டாப்10-ற்குள் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்த ஆண்டு நுழைந்துள்ளது.

இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் அறிக்கையில் கூறும்போது, “அதாவது பாதுகாப்பான உணர்வு, ஒருவரையொருவர் நம்பி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுதல், பலரும் பகிர்ந்துணரும் பண்பாட்டு நிறுவனங்கள்” ஆகியவை இருந்தால் அது மகிழ்ச்சியான நாடு, என்று ஜான் ஹெலிவெல் என்ற ஆய்வாளர் தெரிவித்தார்.

“மேலும் வாழ்க்கையின் கடினப்பாடுகளின் சுமைகளை குறைக்கும் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் நம்பகத்தன்மை, மீண்டெழுதல், இதன் மூலம் நல் வாழ்வின் சமத்துவமின்மையைக் குறைத்தல்” ஆகியவையும் மகிழ்ச்சியான நாடுக்கான அளவுகோலாகும். மாறாக இந்தப் பட்டியலில் கீழ்நிலையில் உள்ள நாடுகளான ஜிம்பாப்வே, தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கடும் ஆயுதப் போராட்டங்கள், வறுமை என்று சமூக நல்லிணக்கம், மகிழ்ச்சி ஆகியவை தூக்கி எறியப்பட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில் 5.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஃபின்லாந்து நாடு 3வது முறையாக உலகிலேயே மகிழ்ச்சியான நாடாக தேர்வாகியுள்ளது.

இத்தனைக்கு பிலாந்தின் மது அருந்துதல் பழக்கம் அதிகம், தற்கொலைகள் அதிகம் ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு மேற்கொண்ட சுகாதார நடவடிக்கைகள் இந்த தீமைகளை வெகுவாகக் குறைத்துள்ளது என்கிறது இந்த ஆய்வு.

பின்லாந்து மக்கள் உயர்தரமான வாழ்க்கை, பாதுகாப்பு, பொதுச்சேவைகளின் பயன்களை அடைதல் ஆகியவற்றில் சிறப்பாகத் திகழ்வதுடன் சமத்துவமின்மை, வறுமை ஆகிய குறியீடுகளில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது குறைவாக உள்ள நாடாக இருக்கிறது.

கரோனா வைரஸ் எனும் துயரம் உலகை ஆட்டிப்படைத்து வரும்போது, “எந்த ஒரு நாட்டின் சமூக அமைப்பும் வலுவாக இருந்தால், அச்சம், ஏமாற்றம், கோபதாபம் ஆகியவை இல்லாமல் எந்த ஒரு பேரிடரையும் சந்திக்கலாம் இதற்கு சமூக நல்லிணக்கம் அடிப்படை” என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x