Published : 20 Mar 2020 04:10 PM
Last Updated : 20 Mar 2020 04:10 PM
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்த தகவல்களை இதில் தொகுத்து அளித்திருக்கிறோம்.
* பெங்களூருவில் தனது மகனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை மறைத்த ரயில்வே அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
* தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்று டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
* கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள, மக்கள் தங்களை சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் வலியுறுத்தியுள்ளனர்.
* இந்த வருடம் ஜி -7 நாடுகள் மாநாடு கரோனா வைரஸ் காரணமாக ஜூன் மாதம் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
* பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் 'சூர்யவன்ஷி' திரைப்பட வெளியீடு கரோனா வைரஸால் ஒத்திவைக்கப்பட்டது போல ரன்வீர் சிங்கின் '83' பட ரிலீஸும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* பஞ்சாப்பில் 26 வயதான பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* பஞ்சாப்பில் 69 வயதான யுகேவைச் சேர்ந்த மூதாட்டிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை அங்கு மூன்றாக அதிகரித்துள்ளது.
* கொல்கத்தாவில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது இரண்டாவது நபருக்கு உறுதி செய்யபட்டுள்ளது.
* கரோனா வைரஸ் தொற்று காரணமாக கேன்ஸ் பட விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
* அமெரிக்காவில் இதுவரை கரோனா வைரஸால் 200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 14,000 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT