Published : 17 Mar 2020 06:27 PM
Last Updated : 17 Mar 2020 06:27 PM
ஈரானில் கரோனா வைரஸுக்கு 135 பேர் புதிதாக பலியானதைத் தொடர்ந்து, வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை கூறும்போது, “ஈரானில் 16,169 பேர் இதுவரை கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 135 பேர் பலியானதை தொடர்ந்து கோவிட் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிகை 988 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 1,178 பேருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர் 60 வயதைக் கடந்தவர்கள். 15% பேர் 40 வயதைக் கடந்தவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் காய்ச்சல் பாதிப்பு ஈரானில் தீவிரமாக உள்ளது என்றும் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு போதிய இடம் இல்லாமல் போகும் என்றும் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஈரானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT