Published : 05 Aug 2015 10:37 AM
Last Updated : 05 Aug 2015 10:37 AM
அமெரிக்காவில் உள்ள இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒட்டகச்சிவிங்கி ஒன்றை வேட்டையாடி, அதனுடைய பிணத்துடன் பெருமையாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட தற்கு, விலங்குகள் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இடாஹோ மாகாண பல்கலைக் கழகத்தில் கணக்காளராக இருப்பவர் சப்ரினா கோர்கெட்டலி. இவர் சமீபத்தில் தென் ஆப்பிரிக் காவில் சுற்றுலா சென்றிருந்தபோது ஒட்டகச்சிவிங்கி ஒன்றை வேட்டையாடினார்.
அதோடு நில்லாமல் அதன் பிணத்துடன் பெருமையாக நின்றபடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவற்றை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்தார். இது விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. தொடர்ந்து சப்ரினாவை எதிர்த்து பலர் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர் தொலைக் காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த போது, "எல்லோரும் என்னை மனசாட்சியற்ற கொலைகாரி என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. நான் விலங்குகளை வேட்டையாடுவதால், அவற்றை நான் மதிப்பதில்லை என்பது அர்த்தம் இல்லை. ஒட்டகச் சிவிங்கிகள் மிகவும் ஆபத்தானவை. அவை உங்களை விரைவாகத் தாக்கி உங்களைக் காயப்படுத்தும் குணம் கொண்டவை" என்று கூறியிருந்தார்.
பலர் அவரை சமூக வலைத்தளங் களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "அப்பாவி விலங்கு களைக் கொல்லும் உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது" என்று கருத்து தெரிவித் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT