Published : 08 Mar 2020 09:54 AM
Last Updated : 08 Mar 2020 09:54 AM
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்கீழ் சவுதி அரேபியா மன்னரின் இளைய சகோதரர் உள்ளிட்ட அந்நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மூவரும் இளவரசர்கள் ஆவர்.
சவுதி அரேபிய நாட்டின் மன்னர் சல்மானின் இளைய சகோதரரான இளவரசர் அகமது பின் அப்துல் அஸிஸ், முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப் மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த உறவினர் இளவரசர் நவாஃப் பின் நயீப் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவ தாக தெரியவந்துள்ளது.
விசாரணைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறி விப்புகள் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர்கள் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டின்கீழ் 3 இளவரசர்களிடமும் நேற்று முன்தினம் முதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளையில், இந்த கைது நடவடிக்கைக்கும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக வும் கூறப்படுகிறது. அவர்கள் தனியிடத்தில் காவலில் வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே போன்று, கடந்த 2017-ம் ஆண்டு முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில் சவுதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ரியாத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடம் அப்போது விசாரணையும் நடத்தப்பட்டது.
2017ம் ஆண்டு முகமது பின் சல்மானால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட இளவரசர் முகமது பின் நயீப் சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சராக இருந்துள் ளார். சவுதி அரேபியாவின் இள வரசராக கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது முதல் அந் நாட்டின் அறிவிக்கப்படாத ஆட்சி யாளர் போன்று முகமது பின் சல்மான் விளங்கி வருவது குறிப் பிடத்தக்கது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT