Published : 06 Mar 2020 10:39 AM
Last Updated : 06 Mar 2020 10:39 AM

கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை1 லட்சத்தை நெருங்கும் அபாயம்: சீனா பயந்தது நடந்து விட்டது- பலி 3042 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,042 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுதும் பலியானோர் எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது. அயல்நாட்டிலிருந்து சீனாவுக்கு வருவோர் மூலம் கரோனா தொற்று அபாயம் இருப்பதாக சீனா அஞ்சியது தற்போது நடக்கவே தொடங்கியுள்ளது.

உலகம் முழுதும் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98,000 ஆக அதிகரித்து ஒரு லட்சத்தை நெருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுதும் சீனாவுக்கு வெளியே கரோனா தொற்று அபாயம் 17% அதிகரித்துள்ளதாக உலகச் சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

சீனாவில் பலி எண்ணிக்கை 3,042ஆக அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,552 ஆக உள்ளது.

கரோனா வைரஸ் புதிதாக 143 பேர்களுக்குத் தொற்றியிருப்பதாகவும் நேற்று மட்டும் பலி 30 பேர் என்றும் சீனாவின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்லது. 30 பலியில் 29 பேர் ஹூபேய் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஒருவர் ஹனான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இதுவரை சீனாவில் சுமார் 53,276 கரோனா தொற்று நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சீனா பயந்தது போல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான கரோனா வைரஸுக்கு 16 பேர் சீனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமையன்று வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான கரோனா தொற்று பீடித்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x