Published : 04 Mar 2020 11:53 AM
Last Updated : 04 Mar 2020 11:53 AM

உலக முழுவதும் 90,870 கரோனா வைரஸால் பாதிப்பு

உலக முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 90,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதாரத் துறை அமைப்பு கூறும்போது, “ மார்ச் மாதம் 3 ஆம் தேதிபடி, உலக முழுவதும் கரோனா வைரஸுக்கு 90,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு 72 நாடுகளில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 3, 112 உயிரிழப்புகள் கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் ஏற்பட்டுள்ளது. ” என்று தெரிவித்துள்ளது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

இத்தாலியில் கோவிட் 19 ( கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 77 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக 4,000க்கும் அதிகமான கரோனா நோயாளிகள் தென் கொரியாவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் பரவலை தடுக்க ஐக்கிய அமீரகம் 4 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x