Published : 01 Mar 2020 05:24 PM
Last Updated : 01 Mar 2020 05:24 PM
தோஹாவில் நடைபெற்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கைதிகளை விடுவிக்கும்படி அமெரிக்கா கோரியதே தவிர, அதற்கு ஆப்கன் எந்தவித பதிலும்அளிக்கவில்லை என்று ஆப்கன் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் நடைபெற உள்ள நார்வே பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கைதிகளை விடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அந்நாடு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோதி தகர்த்தனர். அதன்பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளார்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் ராணுவத்தினர், பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச்சிறப்பு மிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் நேற்று கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின் படி, கடந்த 18 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப்பிரிவுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும். கடந்த 18 ஆண்டுக்கால போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தலிபான் தீவிரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் இருக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் 18 ஆண்டுக்கால போர் முடிவுக்கு வரும். இதனை அடுத்து அடுத்த வாரம் அனைத்து ஆப்கானிஸ்தான் அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.
அடுத்த வாரம் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் ஆப்கானிஸ்தான் பிரிவினரிடையே பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அதாவது 10 நாட்களுக்குள் 5,000 தலிபான் கைதிகளை ஆப்கன் அரசாங்கம் விடுதலை செய்யவும் யு.எஸ்-தலிபான் உடன்படிக்கையில் சனிக்கிழமையன்று கையெழுத்திடப்பட்டதாக தலிபான் அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. இதனை ஆப்கன் மறுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆயிரக்கணக்கான தலிபான் கைதிகளை விடுதலை செய்வது குறித்து சமாதான உடன்படிக்கையில் பகிரங்கமாக ஏற்கப்படவில்லை.
தலிபான் கைதிகளின் விடுதலை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது, அமெரிக்காவுடன் அல்ல, இப்பிரச்சினையில் அமெரிக்காவுடன் எங்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை
நார்வேவில் அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு கைதிகளை விடுவிக்க நாங்கள் தயாராக இல்லை.
கைதிகளை விடுவிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது, அது பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அது ஒரு முன் நிபந்தனையாக இருக்க முடியாது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
கைதிகளை விடுவிப்பது என்பது இந்த உடன்படிக்கையை பலவீனப்படுத்தி, அதனை செயல்படுத்துவதில் முதல் தடையாக இருக்கிறது.
இந்த ஒப்பந்தம் 18 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் மிக நீண்ட போர் முடிவுக்கு கொண்டுவருவதோடு, தங்கள் நாட்டின் எதிர்காலத்திற்காக போட்டி ஆப்கானியப் பிரிவுகளையும் ஏற்றுக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும், அடுத்த 14 மாதங்களில் அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறும் திட்டம், தலிபானின் பயங்கரவாத எதிர்ப்பு செயல்திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இதில் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட உள் ஆப்கானிய பேச்சுவார்த்தைகளுக்கான எந்தவித முன்னேற்றமும் இதில் இல்லை. எனினும் இதனை முதன்மையாக நாங்கள் வலியுறுத்துவோம்.
இவ்வாறு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT