Published : 04 Aug 2015 11:09 AM
Last Updated : 04 Aug 2015 11:09 AM
சிரியாவில் சந்தை பகுதியில் ராணுவ போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 27 பேர் உயிரிழந் தனர். பலர் காயமடைந்தனர்.
சிரியாவின் வடமேற்கு நகரமான அரிஹாவில் நேற்று இந்த சம்பவம் நிகழ்ந் துள்ளது.
உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் அரசுப் படைக்கும் ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனால் எந்த நேரமும் உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அரிகா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் ராணுவ விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50 பேர் வரை காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானம் விழுந்ததில் அப்பகுதியில் இருந்த கட்டிடங்களும் இடிந்தன.
விமானம் தானாக விபத்துக் குள்ளானதா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது தெரியவில்லை. அரிஹா நகரம் முதலில் அரசுப் படையினரின் முக்கிய தளமாக இருந்தது. அதனை ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த மே மாதம் கைப்பற்றினர். இது அப்பகுதியில் அரசுப் படை களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் 2011-ம் ஆண்டு அதிபர் ஆசாத்துக்கு எதிராக உள்நாட்டுப் போர் தொடங்கியது. இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT