Published : 09 Aug 2015 11:38 AM
Last Updated : 09 Aug 2015 11:38 AM
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று அதிகாலை லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பொதுமக்கள் 30 பேர் இறந்தனர். 240 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து காபூலில் உள்ள போலீஸ் பயிற்சி மையம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயிற்சி போலீஸார் 20 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து காபூல் விமான நிலையம் அருகில் நேட்டோ படை வீரர்கள் தங்கியிருக்கும் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நேட்டோ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT