Published : 23 Feb 2020 10:26 AM
Last Updated : 23 Feb 2020 10:26 AM
கரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.
இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன.
இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 லிருந்து 77,000 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மேலும் 97 பேர் ஒரேநாளில் பலியாக பலி எண்ணிக்கை 2442 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 630 புதிய கரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே உலகச் சுகாதார அமைப்பின் சுகாதார நிபுணர்கள் சனிக்கிழமையன்று வூஹான் நகருக்குச் சென்றனர். வைரஸ் குறித்த விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT