Published : 10 Aug 2015 12:22 PM
Last Updated : 10 Aug 2015 12:22 PM
அமெரிக்காவின் பெர்குசனில், கருப்பின இளைஞர் கொல்லப் பட்டதன் முதலாம் ஆண்டு நினை வஞ்சலி பேரணியின்போது கலவரம் வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி கருப்பின இளைஞர் மைக்கேல் பிரவுன் (18) என்பவரை திருட்டு குற்றச்சாட்டில் விசாரிக்க போலீஸார் சென்றனர். அப்போது வெள்ளை இன போலீஸ் அதிகாரி டேரன் வில்சன், மைக்கேல் பிரவுனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்.
திருட்டு குற்றச்சாட்டுக்காக விசாரிக்க சென்றபோது கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மைக்கேல் பிரவுன் ஆயுதம் எதுவும் வைத்திருக்காத நிலையில் அந்த போலீஸ் அதிகாரி இனவெறியுடன் அவரை சுட்டுக் கொன்றதாக கொந்தளிப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு சென்றபோது கறுப்பின இளை ஞரை கொன்றதற்காக போலீஸ் அதிகாரியை பணியில் இருந்து நீக்க தேவையில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இது கறுப்பின மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. பொது சொத்துகள் சேதமாக்கப்பட்டன. போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு கடும் நடவடிக்கைகளை அடுத்து 2 வாரங்களுக்குப் பிறகு அங்கு அமைதி திரும்பியது.
இந்நிலையில் மைக்கேல் பிரவுன் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து பெர்கு சனில் நேற்றுமுன்தினம் அமைதிப் பேரணி நடந்தது. இதில் பல்லா யிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
அப்போது திடீரென சிலர் கற்களை வீசியும், அப்பகுதியில் இருந்த கடைகளை அடித்து உடைத் தும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அமைதிப் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இதனால் பெர்குசன் நகரில் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் பதற்ற மான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பெர்குசனில் மட்டுமின்றி நியூயார்க் உள்ளிட்ட பல இடங்களில் கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதன் முதலாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவில் கறுப் பின மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. நியூயார்க் நகரில் வன்முறையில் ஈடுபட்டதாக கருப்பின இளைஞர்கள் சிலரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT